crossorigin="anonymous">
விளையாட்டு

பொலிஸ் தினத்தை முன்னிட்டு சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேக பூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் நேற்று (04) இடம்பெற்றது

சினேக பூர்வ கிரிக்கட் போட்டியானது சாஹிராக் தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி யூ.எல். சம்சுடீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம். டி. ராஜித ஸ்ரீ தமிந்த பிரதம அதிதியாகவும், ஆர்.எம்.டி. ஜெயந்த ரத்நாயக்க மற்றும் கல்முனை கல்வி வலய அதிகாரி சஹ்துல் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். வுத்திக்க ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியானது பொலிஸ் அணியினரை எதிர்த்து கல்முனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் அணியினர் விளையாடினர்

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய பொலிஸ் அணியினர் தனது அணியினை களத்தடுப்பினை எடுத்ததற்கிணங்க கல்லூரி ஆசிரியர் அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களுகளை மாத்திரம் பெற்றனர்.

90 ஓட்டங்களை இழக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கட்டினை மாத்திரமிழந்து 91 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.

சுற்றுப் போட்டியில் 16 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றதோடு சிறந்த களத்தடுப்பினை ஏற்படுத்திய பொலிஸ் அணி வீரர் டி.எம்.பி.டி. சேனாதீனே ஆட்டநாயகனாகவும்,, 26 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்ற பாடசாலை அணி வீரர் எம்.எம். ரஜீப் போட்டியின் சிறந்த துடுப்பாட்டகாரராகவும் 2 ஓவர்களுக்கு 21 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றிய பொலிஸ் அணி வீரர் டப்லியு.எம்.நாமல் குமாரே வனசிங்க சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சுற்றுப்போட்டியில் பொலிஸ் திணைக்கள மேலதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இறுதில் பிரதம அதிதிக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினாலும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை சார்பாகவும், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஆலோசகர் குழாம் சார்பாகவும் பொன்னாடையும் நிணைவுச் சிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.

(தகவல்:யூ.கே. காலித்தீன், எம்.என்.எம். அப்றாஜ்)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 76 =

Back to top button
error: