crossorigin="anonymous">
விளையாட்டு

மாகாண நீச்சல் துறையில் திறமையான வீரராக முல்லைத்தீவு வீரர்

வட மகாண லைப் காட் சர்வதேச தர நீச்சல் பயிற்சிக்கான தெரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பிரதேசத்தை சேர்ந்த இராதகிருஷ்ணன் லஜிதன் அவர்கள் அதி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 7/11/2021ம் திகதியன்று யாழ். காரைநகரில் நடைபெற்ற நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு (Life Guard) 21 நாள் 2ம் கட்ட பயிற்சிக்கான நடைபெற்ற புதிய அணி தெரிவில் மகாண ஏனைய வீரர்களுடன் பங்குகொண்ட இவர் குறித்த பயிற்சிக்காக நடந்த நீச்சல் தெரிவில் 200 மீற்றர் தூரத்தை 8 நிமிடத்திற்குள் நீந்துதல் என்ற இலக்கில் 4.40 என்ற குறைந்த நேரத்தில் நீந்திக் கடந்துள்ளார்.

இதனூடாக குறித்த தேர்வில் மிக குறைந்த நேரத்தில் முதலாமவராக நீந்தியவராக எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்கு தெரிவு செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மாகாண நீச்சல் துறையில் திறமையான வீரராக இனம் காணப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: