crossorigin="anonymous">
வெளிநாடு

பெற்ற ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது

இந்தியா – விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரை சேர்ந்த துளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்து வேறுபட்டால் கணவன் வடிவழகனை பிரிந்து தவறான தொடர்பில் ஒருவருடன் இருந்த துளசிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது செய்யப்பட்டுள்ளார்.(நக்கீரன்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 28 =

Back to top button
error: