crossorigin="anonymous">
வெளிநாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின. ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் போய்ச் சேர்ந்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றியுள்ளது.

பிற நேசநாட்டுப் படையினரும் பாதுகாப்பாக வெளியேறும் வரை படை விலக்கல் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது என்று சொல்வதற்குப் பதற்றமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரிட்டன் வெளியேற்ற நடவடிக்கையை முன்னின்று நடத்திய வைஸ் அட்மிரல் சர் பென் கே.

இது ஒரு மிகப்பெரிய சர்வதேச நடவடிக்கை என்றும் ஆனால், நமக்கு இது கொண்டாடுவதற்கான தருணம் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். விட்டுவிட்டு வர நேர்ந்தவர்களை நினைத்து சோகம் மேலிடுவதாகவும் அவர் கூறினார்.

பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது, நம்முடைய வாழ்நாளில் பார்த்திராத வகையிலான ஒரு நடவடிக்கையின் நிறைவு என்று கூறினார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய சூழ்நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கான ஏற்பாடுகளை செய்தவரான பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ கிளம்பிய விமானம் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் வந்து சேர்ந்தது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 − = 54

Back to top button
error: