crossorigin="anonymous">
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

இலங்கை கிரிக்கெட் நிறுவன செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று (20) வீடியோ தொழில்நுட்பம் மூலம் ஒன்லைன் வழியாக இடம்பெற்றதுடன் இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2021 – 2023 காலப் பகுதிக்கான தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் தலைவர், பிரதித் தலைவர், செயலாளர் பதவிகளுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த, கே. மதிவாணன், பந்துல வர்ணபுர, நிஷாந்த ரணதுங்க ஆகியோர், இத்தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் (18) அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக, இத்தேர்தலில் தலைவர் பதவிக்காக தனி ஒருவராக போட்டியிட்ட ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − = 12

Back to top button
error: