crossorigin="anonymous">
உள்நாடுபொது

யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கியது

இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் ஒட்சிசன் சிலிண்டர்கள் உட்பட முக்கியமான உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் உதவியுடன் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 291 ஒட்சிசன் சிலிண்டர்களும், 342 ஒட்சிசன் ரெகுலேட்டர் களும் 2490 முகக் கவசங்களும், 20 தீயணைப்பு கருவிகளும் இதில் உள்ளடங்கியுள்ளன.

அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட இந்த பொருட்களை இலங்கைக்கான அவுஸ்திரேலிய பணிக் குழுவின் தலைமை அதிகாரி டேவிட் ஹோலியும், ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் எம்மா பிரிகாமும், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் நேற்று (19) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி இடம் வழங்கி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 56 =

Back to top button
error: