crossorigin="anonymous">
பிராந்தியம்

துணுக்காயில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் (16) துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்லாவிப்பகுதியில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு இடம்பெற்றது.

இதில் பொலிஸார், பிரதேச செயலகத்தினர் மற்றும் பிரதேச சபையினர் ஒன்றிணைந்து மல்லாவி நகரில் அமைந்துள்ள வீடுகள்,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள்,சமயஸ்தலங்கள்,பொது இடங்கள், தொழிற்சாலைகள், பார்வையிட்டதுடன் நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை வைத்திருந்தவர்களிற்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டதுடன் உடனடியாக சீர் செய்யவும் பணிக்கப்பட்டனர்.

மேற்குறித்த செயற்திட்டத்தினை திறம்பட முன்னெடுக்க பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 − = 64

Back to top button
error: