crossorigin="anonymous">
பிராந்தியம்

இலங்கை சாரணர் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024/2025ம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மாவட்ட சாரண சங்கத்தின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டஅரசாங்க அதிபரினால் பல்வேறுபட்ட ஆலோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டது.

அத்தோடு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் சாரணர்களின் செயற்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

மாவட்ட சாரணர் நிருவாக கட்டமைப்பு தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 9 = 1

Back to top button
error: