crossorigin="anonymous">
விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் 17 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் புதிய வீரர்களான நிஷான் மதுஷ்க மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 09ஆம் திகதி கிறைஸ்ட் சேர்ச்சிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 17ஆம் திகதி வெலிங்டனிலும் நடைபெறும்.

இலங்கை அணி விபரம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், அஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, நிஷான் மதுஷ்க, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 1 =

Back to top button
error: