crossorigin="anonymous">
விளையாட்டு

’20-20 KSPL’ கிண்ண போட்டியில் திரித்துவக் கல்லூரி சம்பியன்

கண்டி  பிரதான பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடைபெறும் ’20-20 KSPL’ கிண்ண சம்பியன்ஷிப் கிரிக்கெட்  போட்டி இம்முறை  கண்டி திரித்துவக் கல்லூரி, புனித சில்வெஸ்டர் கல்லூரி,  தர்மராஜா கல்லூரி, கிங்ஸ்வூட் கல்லூரி, வித்யார்த்த கல்லூரி, புனித  அந்தோனியர் கல்லூரி , ஸ்ரீ சுமங்கல கல்லூரி மற்றும் கடுஸ்தோட்ட ராகுல கல்லூரி ஆகிய 08 கல்லூரிகளுக்கிடையில்  கண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்றது

இதன்போது ’20-20 KSPL’ கிண்ண சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி, கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி அணியை தோற்கடித்து வெற்றி  பெற்றது

புனித சில்வெஸ்டர் கல்லூரி அணியின் விக்கெட் காப்பாளர் சஹான் திஸாநாயக்க  சிறந்த பந்துவீச்சாளராகவும், கண்டி திரித்துவக் கல்லூரியின் கலன விமலதர்ம சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், கண்டி திரித்துவக் கல்லூரியின் விபாவி அஹலேபொல போட்டி நாயகனாகவும் விருதுகளை வென்றனர்.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கியதுடன் நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச, வானொலியின் உதவிப் பணிப்பாளர் சமன் ஜயரத்ன, பாடசாலை விளையாட்டுப் பணிப்பாளர் அதுல ஜயவர்தன, இன்போடெக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் அஷான் கமகே மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்

மத்திய மாகாண கல்வித் திணைக்களம், இலங்கை கதுரட வானொலி சேவை  மற்றும் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து ’20-20 KSPL’ கிண்ண சம்பியன்ஷிப் கிரிக்கெட்   போட்டியை ஏற்பாடு செய்திருந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − = 66

Back to top button
error: