crossorigin="anonymous">
வெளிநாடு

ராக்கெட் நிலவில் மோதி வெடிக்க உள்ளது

மார்ச் 4ஆம் திகதி நிலவின் மீது மோதி வெடிக்கலாம்

சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ‘தி ஃபால்கன் 9 பூஸ்டர்’ ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.

ஒரு வானிலை செயற்கைக் கோளை, 10 லட்சம் மைல் தொலைவுக்குப் பயணித்து நிலை நிறுத்திவிட்டு, புவிக்குத் திரும்ப முடியாத ஃபால்கன் 9 ராக்கெட் ஏழு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது.

இந்த விண்வெளிப் பயணம், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் விண்வெளியில் வாழும் குறிக்கோளைச் சாத்தியமாக்க, ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்கிற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் அந்த ராக்கெட் பூமி, நிலவு, சூரியன் என பலதரப்பட்ட ஈர்ப்பு விசைகளின் ஆதிக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் மையத்தின் பேராசிரியர் மெக்டோவல் கூறினார்.

விண்வெளியில் தன் பணியை நிறைவு செய்துவிட்டு, பூமிக்குத் திரும்பப் போதுமான திறன் இல்லாமல் விண்வெளியிலேயே சுற்றித் திரியும் லட்சக் கணக்கிலான விண்வெளிக் குப்பைகளில் ஒன்றாக ஃபால்கன் 9 ராக்கெட்டும் இணைந்தது.

ஃபால்கன் 9 ராக்கெட் வரும் 2022 மார்ச் 4ஆம் தேதி நிலவின் மீது மோதி வெடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: