crossorigin="anonymous">
உள்நாடுபொது

கச்சத்தீவு உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர் அனுமதிக்கப்படமாட்டார்கள்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.

இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுமார் 500 வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்தப்படவுள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − = 36

Back to top button
error: