crossorigin="anonymous">
விளையாட்டு

பாகிஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்க பதக்கம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவி அவர்கள் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் கணேஷ் இந்துகாதேவி அவர்கள் குத்துச் சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்று பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப் பிரிவின் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மக்கள் சார்பில் வெற்றி மங்கையின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர தனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − 32 =

Back to top button
error: