crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸுக்கு Kappa, Delta என பெயரிடல்

உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸுக்கு “கப்பா” (Kappa) என்றும், 2-வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு “டெல்டா” (Delta) என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

பி.1.617.2 உருமாறிய கரோனா வைரஸை இந்தியாவில் உருவான கரோனா வைரஸ் என்று ஊடகங்கள் அழைக்கவும், பிற நாடுகள் அழைக்கவும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்பு அவ்வாறு குறிப்பிடாதபோது இந்தியாவின் பெயரை வைரஸுடன் சேர்த்து குறிப்பிடுவது சரியல்ல, ஆதாரமற்ற வகையில் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று கண்டித்தது. மேலும், இந்தியாவின் பெயரை வைரஸுடன் சேர்த்து அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உருமாறிய கரோனா வைரஸை எளிதாகக் கண்டறியும் வகையில், அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை. பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்படி பி.1.617.1 வகை வைரஸுக்கு ‘கப்பா’ என்றும் பி.1.617.2 வகை வைரஸுக்கு ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு வைரஸ்களும் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உருமாறிய வைரஸ் ஒன்றையும் கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்தவும் முடியும், அதைக் குறிப்பிட்டுப் பேசவும் முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.1.7 வைரஸை “ஆல்ஃபா” என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸுக்கு ”பீட்டா” என்றும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரஸுக்கு “காமா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு “கப்பா” என்றும், “டெல்டா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பெயர்கள் எளிதாக அடையாளப்படுத்திக் காட்டும் என்றாலும், இதன் அறிவியல்ரீதியான பெயர்கள் மாறாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.(இந்து)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: