crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் நேற்று (18) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட பதிவு செய்யப்பட்ட 74 இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இந்து ஆலயங்கள் இடர்கால உதவிகளை புரிதல், அறநெறி கல்வியை ஊக்குவித்தல், ஆலயங்களை பிணக்குகள் இன்றி ஒற்றுமையாக கொண்டு செல்லல், மதமாற்றத்தை கட்டுப்படுத்தல், சமூக ஏற்றத்தாழ்வு பாராது வழிபட வழிவகுத்தல், வீணான ஆடம்பர செலவுகளை குறைத்து அதை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுதல், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிப்படை தன்மையுடன் கணக்கு நடவடிக்கைகளை கையாலால் உள்ளிடட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களுக்கான விழிப்புணர்வு விரிவுரைகளும் இடம்பெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: