crossorigin="anonymous">
ஆக்கங்கள்

‘’விபுலாநந்தம்”  மற்றும்  ”Essay of Swami Vipulanantha”  நூல்கள் வெளியீடு

மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிசன் துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தா ஜீ எழுதிய, உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் ஆக்கங்களடங்கிய இரு நூல்களின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமியின் புனரமைக்கப்பட்ட சமாதி அமைந்துள்ள வளாகத்திலுள்ள மணிமண்டத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

‘’விபுலாநந்தம்” என்ற தமிழ் நூலும் ”Essay of Swami Vipulanantha” என்ற ஆங்கில நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூல்களை இந்து சமய கலாசார திணைக்களம் பதிப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1008 பக்கங்களுடன் கூடிய ‘‘விபுலாநந்தம்” தமிழ் நூலும் 252 பக்கங்களுடைய “Essay of Swami Vipulanantha” ஆங்கில நூலும் இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனினால் இலங்கை இராமகிருஸ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ்ஜூற்க்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையுடன்கூடிய அறிமுகவுரையை துணை மேலாளரும் நூலாசிரியருமான ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ நிகழ்த்தியிருந்தார். சிறப்புரைகளை அம்பாறை
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் , இந்து சமய கலாசார திணைக்களம் பதிப்பித்த சுவாமி நீலமாதவாநந்தாஜீயின் இரு நூல்களை வெளியிட்டுவைத்து ஆசியுரையை நிகழ்த்தினார்.

விழாவில், கிழக்கு பல்கலைக்கழக விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் திருமதி.பாரதி கென்னடி, காரைதீவு விபுலாநந்தா ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, மட்டக்களப்பு விபுலாநந்த நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் க.பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சுவாமிகள் நூல்பிரதிகளை வழங்கினார்.

நூல்கள் அதிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் மேலாளர் ஸ்ரீமத்சுவாமி தக்ஷயானந்தா ஜீ நன்றியுரையாற்றினார். உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர்
முத்தமிழ் வித்தகர்சுவாமி விபுலாநந்த அடிகளரின் நினைவு வளாகத் திறப்புவிழாவும் இதன்போது நடைபெற்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் இராமகிருஷ்ணமிசன் அபிமானிகள் கலந்துகொண்டார்கள். முன்னதாக பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் மறுசீரமைக்கப்பட்ட சமாதி அதிதிகளால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டன.

இ.கி.மிசன் சுவாமிகள் பஜனாவளியுடன் புஸ்பாஞ்சலி செலுத்தி தீபாராதனை காட்டி ஆசீர்வதித்தனர். பின்பு வளாகத்திலுள்ள சுவாமி விபுலாநந்த மணிமண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: