crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இன்று தென்கிழக்கு வான்பரப்பில் சந்திர கிரகணத்தை பார்வையிடலாம்

அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக காட்சியளிக்கும்

இலங்கையில் இன்று (26) மாலை 6.23க்கு தென்கிழக்கு வான்பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.20 வரை இலங்கையில் பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பிரிவின் வானிலை மற்றும் வளிமண்டலவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் பின்னர் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது முழுமையான சந்திர கிரகணமாக காட்சியளிக்கும்.

சந்திர கிரகணம் சூரிய ஒளியை தான் நிலவு பிரதிபலிக்கிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல்  நிலவில் படுகிறது.

பூமி – நிலவு இடையேயான சராசரி தொலைவானது, 3.84 இலட்சம் கி.மீ., விட குறைவாக இருக்கும்போது, ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது. அப்போது, சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும், நிலவு தெரியும்.

சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர, 365.26 நாளாகிறது. நிலவு ஒரு முறை பூமியைச் சுற்ற, 29.32 நாளாகும். இக்கணக்கீட்டு முறையில் பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது.

‘சூப்பர் மூன்’ ஏற்படும் போது, நிலவானது பூமிக்கு அருகில் வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், ‘ஆரஞ்சு’ முதல் இரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது, ‘இரத்த நிலா’ எனப்படுகிறது.

இந்தியாவில் இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும். மாலை, 4:39 முதல், 4:58 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். இந்தியாவில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஒடிசா, அந்தமான் நிக்கோபர் தீவின் கடலோர பகுதிகளில், பாதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிரகணம், பெரிய நிலா, இரத்த நிலா மூன்றையும் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 43 − 39 =

Back to top button
error: