crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

காரைநகரில் கடும் காற்று, 25 பேர் பாதிப்பு

காரைநகர் பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் காரைநகர் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக (25) யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தெரிவித்தார்.

வடக்கில் தற்போது நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையின் காரணமாக காரை நகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது ஒருவர் காயமடைந்துள்ளதோடு சுய தொழில் முயற்சியாளர் ஒருவரின் கோழி கூடு கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடும் காற்றினால் காரணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 + = 26

Back to top button
error: