crossorigin="anonymous">
விளையாட்டு

உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கம்

ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இணைந்து கொண்டது.

இலங்கை இராணுவத்தின் லான்ஸ் காேர்ப்ரல் சஜீவா நுவான் மற்றும் இலங்கை விமானப்படையின் லீடிங் எயார் கிராப்ட் வுமன் கயானி களுஆராச்சி ஆகிய இருவரும் மாெஸ்கோவில் உள்ள தேசபக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச போட்டியில் தங்களின் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்.

கவச வாகன படையணியைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்ரல் சஜீவ நுவான், இராணுவ இலகு எடை பிரிவுகளில் ஒன்றான 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படையின் லீடிங் எயார் கிராப்ட் வுமன் கயானி களுஆராச்சி மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 19ம் திகதியிலிருந்து 26ம் திகதி வரை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற 58வது உலக ராணுவ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 36 நாடுகளில் இருந்து சுமார் 230 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 58வது உலக இராணுவ குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்காக பத்து எடை பிரிவுகளிலும் பெண்களுக்காக ஐந்து எடை பிரிவுகளிலும் போட்டிகள் இடம்பெற்றன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 68 =

Back to top button
error: