crossorigin="anonymous">
வெளிநாடு

அமெரிக்க நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்கள் மழை நீரில் மூழ்கி வெள்ளம்

இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் இதுவரை 41 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்சி மாநிலத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநில ஆளுநர் ஃபில் மர்ஃபி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள். திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் அடித்துச் செல்லப்பட்டனர்.

நியூயார்க் நகரத்தில் இரண்டு வயதுச் சிறுவன் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் தரைத் தளத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கிக் கொண்டவர்கள்.

இந்தத் தீவிரமான புயல் மற்றும் மழைப் பொழிவுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஏராளமான முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: