crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு – பாவற்கொடிச்சேனை விவசாய காணியிலிருந்து கைக் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் விவசாய காணியிலிருந்து கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளர் நேற்று (02) பிற்பகல் காணியை விவசாய செய்கைக்காக தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தபோது பொலீத்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்து கைக் குண்டுகள் கண்டுள்ளதுடன், பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் மூன்று கைக் குண்டுகள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்ததுடன், குறித்த கைக் குண்டுகளை பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: