crossorigin="anonymous">
உள்நாடுபொது

காரைநகரிலிருந்து யாழ். நகருக்கு பயணிகள் சகிதம் பயணித்த பஸ் விபத்து

காரைநகரிலிருந்து யாழ். நகருக்கு பயணிகள் சகிதம் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கல்லுண்டாய் பகுதியில் இன்று (12) தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேகமாக வந்த பேருந்து தனியார் பேருந்தினை முந்த முற்பட்ட வேளையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேரூந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் காலை மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கும் தண்மையுடன் காணப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − 52 =

Back to top button
error: