crossorigin="anonymous">
வெளிநாடு

கேரள மாநிலத்தின் முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு

இந்தியா – கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று (20) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 87 = 92

Back to top button
error: