ஆக்கங்கள்

பலஸ்தீனில் உள்ள பைதுல் மக்தஸ் வளாகம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் புனித தளமாக கருதப்படுகிறது

பலஸ்தீனில் உள்ள பைதுல் மக்தஸ் வளாகம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் புனித தளமாக கருதப்படுகிறது. அதனால் தான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குத்ஸ் தமது கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த உரிமையை மூன்று மத மக்களுக்கும் வழங்கிவந்தார்கள்.

கடந்த சில நாட்களாக ஜெரூஸலத்தில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான வன் செயல்கள் செய்ஹ் ஜர்ராவில் இருந்தே ஆரம்பமானது. செய்ஹ் ஜர்ராஹ் என்பது ஜெரூஸலத்தீன் புறநகர் பகுதி.
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி றஹ்மஹூல்லாஹ் அவர்களின் படைத்தளபதியும் காதிரிய்யா தரீக்காவின் கலீபாவுமாகிய செய்ஹ் ஹஸுமுத்தீன் அல் ஜர்ராஹ் அல் காதிரி அவர்களை நினைவுகூறும் வகையில் இந்த இடத்திற்கு செய்ஹ் ஜர்ராஹ் என்று பெயர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர் அமைத்த காதிரிய்யா ஸாவியா இன்றும் அல் அக்ஸா வளாகத்தில் காட்சி தருகிறது. செய்ஹ் ஜர்ரா பிற்காலத்தில் அங்கேயே வாழ்ந்தார்கள்.

அல் அக்ஸா விடுதலைப் போராட்டத்திற்கு காதிரிய்யா மற்றும் ஷாதுலிய்யா தரீக்காக்கள் வழங்கி பங்களிப்புக்கள் மிகவும அதிகமாகும். இமாம் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ சிர்ரஹூ அவர்கள் ஆன்மீக வழியில் வந்த நூர்தீன் ஸங்கி, ஸலாஹூத்தீன் ஐயூபி, செய்ஹ் ஜர்ரா, இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் போன்ற காதிரி சூபிகள் ஆற்றிய சேவைகளும் அவர்களின் அணுகுமுறைகளையும் வாசிப்பது அவசியமாகும்.

இமாம் அபுல் ஹஸன் ஷாதிலி தனது மாணவர்களுடன் ஹூமைதராவில் மேற்குலக சக்திளுக்கு எதிராக போராட தயாராக இருந்த வேளையில் தான் அங்கு மறைந்தா்கள்.ஹஸ்புல் பஹ்ரையும் அதே இடத்திலிருந்தே மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள். அல் அக்ஸா வளாகத்தில் இன்றும் பல ஸாவியாக்களை காணமுடியும்.

பைதுல் மக்திஸ் என்பது மனித குலத்தின் சமாதானத்திற்கான தளமாகும். அதனால் தான் அந்தப் பகுதியை இறைவன் அருள்நிறைந்த இடமாக அமைத்துள்ளான். சகல மதத்தவர்களாலும் கண்ணியப்படுத்தப்படும் பூமியாகவும் அதனை அடையாளப்படுத்தியுள்ளான்.

மனித குலத்தின் பெரும் அச்சுறுத்தலான சியோனிஸ ஒடுக்குமுறைகள் எதுவுமே அற்ற பூமியாக அனைவருக்கும் வாழ இறைவன் அருள்புரிவானாக.

-பஸ்ஹான் நவாஸ்-

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: