விளையாட்டு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கை வருக்கிறது

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இம்மாதம் இலங்கை வரவுள்ளது.
இலங்கை அணியுடனான 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ரி20 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கலந்துகொள்ளவுள்ளது.
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி (பகல் இரவு போட்டிகளாக) செப்டம்பர் மாதம் 02ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 04 ஆம் திகதியும் ,மூன்றாவது போடடி 07 திகதியும் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து டிடுவென்டி கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 10ஆம் 12 ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.