crossorigin="anonymous">
உள்நாடுபொது

131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வு

131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வு நேற்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டடன. அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சோமாவதிய ரஜ மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் ஆகியோருக்கு அதற்கான சன்னஸ பத்திரம் வழங்கப்பட்டது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் திரு காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர். கே.ஏ.டி.ஆர் நிசாந்தி உள்ளிட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − = 53

Back to top button
error: