உள்நாடுபிராந்தியம்
வெருகல் பிரதேசத்தில் மலசல கூட வசதிகள் அற்ற 97 பேருக்கு மலசலகூட வசதி

வெருகல் பிரதேசத்தில் மலசல கூட வசதிகள் அற்ற 97 பேருக்கு மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02) வெருகல் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே. குணனாதன் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் இதன்போது பயனாளிகளுக்கான வேலை ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதத்தை வழங்கி வைத்தனர்.
மலசலகூடம் ஒன்றை அமைக்க பயனாளி ஒருவருக்கு அரசாங்கம் 69500 ரூபாவை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக அரசாங்கம் 6741500 ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், திணைக்கள தலைவர்கள், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.