crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாண பிரயாண தடை மீறி  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த பஸ் வண்டி தடுத்து வைப்பு

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பிரயாணத் தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி 49 பயணிகள் சகிதம் வந்த 3 சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.எ.சமரகோன் தெரிவித்தார்.

அவ்வாறு பயணித்த இவர்களுக்கு மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ. சிறிநாத் தெரிவித்துள்ளதுடன் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஏனைய பயணிகள் அன்ரிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக் கடந்து கொழும்பிற்குச்சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.

தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − = 39

Back to top button
error: