crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைக்கு ஆலோசனைக் குழு அனுமதி

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பண்டங்கள் ஏற்றுமதி சம்பந்தமான செஸ் வரி திருத்தம் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (01) இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இந்த கட்டளை வர்த்தக அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 ஜனவரி 21 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

1972 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14(1) பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் வர்த்தக அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட 2210/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஏற்றுமதியின் போதான செஸ் வரி திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் தலைமையில் வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (01) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் தினமொன்றில் இந்த கட்டளையை பாராளுமன்ற அனுமதிக்காக முவைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க, நலின் பிரனாந்து, மர்ஜான் பளீல் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 8

Back to top button
error: