crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஆட்பதிவு திணைக்கள சேவை திங்கட்கிழமை முதல்

இலங்கை ஆட்பதிவு திணைக்கள சேவைகளை இம்மாதம் ஜூலை 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட அளவில் தொலைபேசி அழைப்பின் மூலம் திகதி மற்றும் பதிவு இலக்கத்தை பெறுவதன் மூலம் முற்பதிவின் அடிப்படையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதேச செயலகங்களின் அடையாள அட்டைப் பிரிவில் சேவைகளை பெறுவோர், உரிய மாகாண அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்வது கட்டாயமாகுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகள் பதிவுத் தபாலில் மிக விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மே மாதம் முதல் ஆட்பதிவு திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்பதிவு திணைக்கள சேவைகளை பெறுவதற்கான முற்பதிகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைத்து, திகதி மற்றும் பதிவு இலக்கத்தை பெற முடியும்.

பத்தரமுல்ல தலைமை அலுவலகம்: 0115 226 126/ 0115 226 100
வட மாகாண அலுவலகம்: 024 222 72201
கிழக்கு மாகாண அலுவலகம்: 065 222 9449
வடமேல் மாகாண அலுவலகம்: 037 555 4337
தென் மாகாண அலுவலகம்: 091 222 8348

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 29

Back to top button
error: