crossorigin="anonymous">
வெளிநாடு

சீனாவும், ரஷ்யாவும் 20 வருட நட்புறவை புதுப்பிப்பு

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் காணொளி கலந்துரையாடல்

சீனாவும், ரஷ்யாவும் அவற்றின் 20 வருட நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் அறிவிப்பை நேற்று முறைப்படி வெளியிட்டன.இது தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் காணொளி காட்சி வழியாக பேசினர்.

2001ஆம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தங்களுடைய நட்புறவு புதிய உச்சத்தை தொட்டதாக பெருமிதப்பட்டனர்.

இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

சீனா, ரஷ்யா இடையிலான கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஷி ஜின்பிங், பொது நல விவகாரங்களில் இரு நாடுகளும் சர்வதேச அரங்குகளில் ஒன்றுக்கொன்று தோள் கொடுக்கும் என்று கூறினார்.

ஒரு காலத்தில் எதிரிகளாக விளங்கிய இந்த இரு முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளும் மேற்கு நாடுகளின் அன்னிய போக்குக்கு மத்தியில் அவற்றின் நல்லுறவை பேணிப்பாதுகாத்து வருகின்றன.

எதிர்காலத்தில் ரஷ்யா, சீனா இடையே ராணுவ கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் தருவதை இந்த நாடுகளும் முந்தைய காலங்களில் தவிர்த்து வந்தன. ஆனால், அத்தகைய வாய்ப்பை ஒதுக்கி விட முடியாது என்று கூறியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 5

Back to top button
error: