crossorigin="anonymous">
பிராந்தியம்

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய்,அளம்பில், கள்ளப்பாடு, செம்மலை கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு நண்டு வலை, சூடை வலை, கொண்டை வலை முதலான மீன்பிடி உபகரணங்கள் MSEDO நிறுவனத்தின் உதவியினால் நேற்று (04) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாற்பது மீன்பிடி பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு பயனாளருக்கு 45000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் நிவாரண பொருட்களையும் வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் MSEDO நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஜான்சன் மற்றும் MSEDO நிறுவன உத்தியோகத்தர்கள் ,பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 1

Back to top button
error: