crossorigin="anonymous">
வெளிநாடு

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் உயிரிழப்பு

இந்தியாவில் போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (18) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த மருத்துவர் ராமன் குறித்த புகார் மனு பெறப்பட்டது. இந்த புகார் மனு மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

விசாரணை அறிக்கையில், மருத்துவர் ராமன், கரோனா தொற்று ஏற்பட்டு ஐ-மெட் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சுரேஷ் மூலம் ரெம்டெசிவிர் பெறப்பட்டு அவருக்கு செலுத்தியதில் அவரது உடல் நிலை மேலும்பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, அவரை சென்னையில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 13-ம் தேதி அவர் உயிரிழந்தார். விசாரணை நடத்தியதில் அந்த ரெம்டெசிவிர் மருந்து போலியானது என கண்டறியப்பட்டது.

அம்மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி ரூ.1 லட்சம் அபராதம்விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான கரோனா சிகிச்சை இரத்து செய்யப்படுகிறது.

வெளிச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்கப்படும் தகவல் உடனடியாக அரசு கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில் துறை ரீதியான துரித நடவடிக்கை எடுக்கப்படும். என இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.(ஹிந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 53 = 56

Back to top button
error: