crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (17) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. முதலீட்டு மூலோபாயங்கள் மற்றும் கொள்கைச்சட்டகம் – செலென்திவ முதலீட்டு கம்பனி (Selendiva Investments Limited)

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஹோட்டல் சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் உள்ளிட்ட முதலீடுகளை மீள்கட்டமைத்து அவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் அபிவிருத்தி கம்பனியொன்;றை உருவாக்குவதற்காக 2020 மார்ச் மாதம் 04 ஆம் திகதி அமைச்சரவையால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கமைய 100% வீதம் திறைசேரிக்கு உரித்துடையதான செலென்திவ முதலீட்டு கம்பனியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான கென்வின் ஹோல்டிங்க்ஸ் தனியார் கம்பனி, ஹோட்டல் டிவலொபேர்ஸ் (லங்கா) கம்பனி மற்றும் ஹோட்டல் கொழும்பு கம்பனி போன்ற கம்பனிகள் தற்போது செலென்திவ முதலீட்டுக் கம்பனியின் கீழ் கொண்டுவரபட்டுள்ளது. செலென்திவ முதலீட்டு கம்பனி அரசாங்கத்திற்குச் சொந்தமானதென அடையாளங் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளுக்காக வசதியளிப்பதற்காக அரச – தனியார் பங்குடமையின் அடிப்படையில் முதலீட்டு வசதியளித்தல்கள் வழங்கும் கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் கொழும்பு கோட்டை(Selendiva Investments Limited) ‘ நிலையான சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் இராசரட்டைக்குரிய ஹோட்டல் பிரிவு என மூன்று (03) கொத்துக்கள் நடைமுறைப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. வெலிக்கடை சிறைச்சாலை தொகுதி ஹொரனவிலுள்ள மில்லாவ பகுதியில் மீள்கட்டமைத்தல், வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள காணியை கலப்பு நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காகப் பயன்படுத்தல்

42 ஏக்கர் காணியில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலை தொகுதி ஹொரனவில் அமைந்துள்ள மில்லாவ தோட்டத்தில் அமைந்துள்ள 200 ஏக்கர்களில் மீள்கட்டமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, குறித்த காணியில் புதிய சிறைச்சாலை தொகுதியை அமைப்பதற்கும், தற்போது வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தி முறையாகத் தெரிவு செய்யப்படும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களும் நீதி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி உரித்து வழங்கல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதனால் புலம்பெயர் பணியாளர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் போது உயர்ந்தபட்சம் 600,000 ரூபாய்களும், முழுமையான அங்கவீனம் ஏற்படும் போது உயர்ந்த பட்சம் 400,000 ரூபாய்களும் இழப்பீடு வழங்கப்படும். ஆனாலும் குறித்த புலம்பெயர் பணியாளர்களுக்கு வேலைத்தளங்களில் இடம்பெறும் பல்வேறுபட்ட தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமட்ட விபத்துக்கள், பல்வேறு நோய்வாய்ப்படல், முதலாளிமாரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் ஏற்படும் உள ரீதியானதும் சுகாதார ரீதியானதுமான பிரச்சினைகளுக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ளல், மற்றும் கொவிட் – 19 தொற்று நிலைமையால் தொழில் இழத்தல் போன்றவற்றுக்காக எந்தவொரு காப்பீடுகளும் இல்லை. அதனால் குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு புலம்பெயர் பணியாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனத்துக்கு எடுத்தல்.

இல 330, கலாநிதி என்.எம். பெரேரா மாவத்;தை, கொழும்பு 08 இல் அமைந்துள்ள 0.1765 ஹெக்டயர் காணித்துண்டை சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனத்துக்கு வழங்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சிகிச்சை நிபுணத்துவ அபிவிருத்தி ஆய்வு கூடம் மற்றும் கற்கைகள் கூடம், இலங்கை பாரம்பரிய உணவுத் தயாரிப்பு பயிற்சி நிலையம் மற்றும் போசனசாலை உள்ளிட்ட 08 மாடிகளுடன் கூடிய பல்நோக்கு கட்டிடத்தொகுதியை குறித்த இடத்தில் நிர்மாணிப்பதற்கு சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் முகாமைத்துவச் சபை தீர்மானித்துள்ளதுடன், அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. அதற்மைய குறித்த காணித்துண்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ விஞ்ஞான நிறுவனத்துக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பசுமை தொழில்முயற்சி மேம்பாட்டின் மூலம் சுற்றாடலை பாதுகாத்தல்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வன அடர்த்தியை 30மூ வீதமாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது சுற்றாடல் அமைச்சின் கீழ் ‘சுரக்கிமு கங்கா’ (நதிகளை பாதுகாப்போம்) தேசிய சுற்றாடல் பாதுகாப்பு சுற்றாடல் நிகழச்சித்திட்டம் மற்றும் ‘ஹூஸ்ம தென துரு’ (மூச்சு தரும் வரை) மர நடுகை நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் உள்ளிட்ட பல பங்காளர்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு தேவையான கன்றுகளை விநியோகிப்பதற்காகவும் கிராமிய சமூகத்தை வலுவூட்டி பசுமை தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை பூராகவும் புதிதாக 650 நாற்றுமேடை உற்பத்தியாளர்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் குறைந்த வருமானம் கொண்ட 650 குடும்பங்களுக்கு நாற்றுமேடை உற்பத்தியாளர்களுக்கான முறையான பயிற்சியை வழங்கி பசுமைத் தொழில் முயற்சியாளர்களாக செயற்படுவதற்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2013 காணிக் கையகப்படுத்தல் (இழப்பீடு செலுத்தல்) கட்டளையை திருத்தம் செய்தல்.

அடையாளம் காணப்பட்ட 20 கருத்திட்டங்களுக்காக காணி மீட்பு குழு முறைமை (டுயுசுஊ), காணி மீட்டு விசேட குழு முறைமை (ளுரிநச டுயுசுஊ) இன் கீழ் இழப்பீடு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக காணி கையகப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளில் குறித்த கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன. கீழ் காணும் கருத்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் குறித்த முறைமையை பின்பற்றுவதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• கொழும்பு தலைநகரை அண்டிய பகுதிகளில் அபிவிருத்திக் கருத்திட்டங்கள்

• தம்புள்ள ஊடாக குருநாகலில் இருந்து ஹபரன வரையான புகையிரதப் பாதைக் கருத்திட்டம்

• மூலோபாய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

• ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் மின்கட்டமைப்பு உப நிலையங்கள் மற்றும் ஒலிபரப்பு பரிமாற்ற அபிவிருத்தி கருத்திட்டம்.

அதற்கமைய 2021 மார்ச் மாதம் 18 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2013 காணிக் கையகப்படுத்தல் (இழப்பீடு செலுத்தல்) திருத்தப்பட்ட கட்டளைகளின் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொவிட் 19 அவசர நிலைமையில் பெறுகை செயன்முறைக்காக புதிய வழிகாட்டலை அறிமுகப்படுத்தல்.

தற்போது நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமையால் சுகாதாரத் துறை சார்ந்த சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குறித்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு தேவையான பொருட்களை தாமதமின்றி விநியோகிப்பதற்காக தற்போது காணப்படும் பெறுகை செயன்முறைகளை இலகுபடுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள், ஏனைய மருத்துவ தேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை துரிதமாக கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள பெறுகைச் செயன்முறையை திருத்தியமைத்து புதிய வழிகாட்டலை வெளியிடுவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 97 − = 94

Back to top button
error: