crossorigin="anonymous">
விளையாட்டு

தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு எக்ஸ்ரிம் சொட்டாக்கன் கழகத்தில் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சுற்றுப் போட்டிகளும் கௌரவிப்பும் நிகழ்வு சென் ஜேன்ஸ் மண்டபத்தில் எஸ்.சுகிர்தன் தலைமையில் நேற்று முன்தினம் (06) இடம் பெற்றது.

நிகழ்வில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கேடயங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளத்தின் தலைவர் மொஹமட் இக்பால் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − = 58

Back to top button
error: