crossorigin="anonymous">
விளையாட்டு

கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு போட்டி

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று (18) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், ஊழியர் நலன்புரி சங்கத் தலைவர் திருமதி. லி.கலாஜினி அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விளையாட்டுப்போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலர் அணி கைப்பற்றியது.

இரண்டாம் இடத்தினை பூநகரி பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், பிரதம கணக்காளர் சி.கஜேந்திரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் வே.கலைச்செல்வன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா ஜெயகரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஜெ.றெமின்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரச அதிபர் வெற்றிக் கிண்ண தொடரின் இறுதிநாள் நிகழ்வில் ஆண் பெண்களுக்கான 100M ஓட்டப்போட்டி, 200M ஓட்டப்போட்டி, கலப்பு அஞ்சல் ஒட்டம்,குண்டு எறிதல், ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டி, கயிறு இழுத்தல் இறுதிப் போட்டி, மெதுவான சைக்கிள் ஓட்டம்,பதவிநிலை உத்தியோகத்தகளுக்கான போட்டி,விருந்தினர்களுக்கான போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வின் இறுதியில் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தொடரின் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: