crossorigin="anonymous">
பிராந்தியம்

அன்னூர் பாடசாலைக்கு டிஜிட்டல் கணினித் திரை, உபகரணங்கள் அன்பளிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 30 ஆவது கட்டமாக 1,047,500.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் அநுராதபுரம், இகிரிகொல்லாவ அன்னூர் தேசிய பாடசாலைக்கு நேற்று (12) கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் 29 கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 24,843,650.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − 96 =

Back to top button
error: