crossorigin="anonymous">
வெளிநாடு

சீனாவில் H3N8 வகை பறவைக் காய்ச்சல், ஒருவர் மரணம்

உலக சுகாதார நிறுவனம் தகவல்

சீனாவில் H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில்,
“H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலுக்கு சீன பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு மனிதர்கள் பலியாவது இதுதான் முதல் முறை. H3N8 வகை பறவைக் காய்ச்சலால் சீனாவில் இதுவரை மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த காய்ச்சல் ஒருவருடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது அல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மற்ற நோய்களும் தீவிரமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

H3N8 என்ற பறவைக் காய்ச்சலால் பொதுவாக பறவைகளே பாதிப்பபடும் என்றும், பறவைகள் மூலம் விலங்குகளுக்கும் இந்த வகை காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: