crossorigin="anonymous">
பிராந்தியம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வுகள் (02), (03) திகதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வுகள் கல்முனை வடக்கு பிரதே செயலகப் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வாக அமைந்திருந்ததுடன் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை ஆகிய பகுதிகளில் காணப்படும் மயானங்களை சுத்தம் செய்யும் விதமாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து பெரியநீலாவணை பொலிஸ் நிலையம், பொது அமைப்புகள், பொதுமக்களென அனைவரின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: