crossorigin="anonymous">
விளையாட்டு

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.(படம்:REUTERS)

பிபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்றகோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

32 அணிகள் கலந்துகொண்ட பிபா 22-வது உலகக் கோப்பை கால் பந்து தொடர் இறுதி ஆட்டம் நேற்று இரவு தோகாவின் லுசைல் நகரில் உள்ளலுசைல் மைதானத்தில் நடைபெற்றது.

36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜெண்டினா வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.

இதில் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் பிரான்ஸ் அணியானது, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

பிபா 22-வது உலகக் கோப்பை கால் பந்து தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 93 =

Back to top button
error: