crossorigin="anonymous">
வெளிநாடு

01.01. 2009 அல்லது அதன் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருள் விற்பனை தடை

நியூசிலாந்தை 2025 ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற நடவடிக்கை

நியூசிலாந்தில் புதிய சட்டம்படி 01.01. 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்கள் விற்க முடியாது.

நியூசிலாந்து நாடு இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய அதிரடியானதுமான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை நியூசிலாந்துபிரதமர் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு எடுத்து வருகிறது.

அதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை நியூசிலாந்து அதிகரிக்கிறது .அதாவது, நியூசிலாந்தில் சிகரெட் வாங்க அந்த நபர் 63 வயது அல்லது அந்த வயதைத் தாண்டிய நபராக இருக்க வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − = 21

Back to top button
error: