crossorigin="anonymous">
பிராந்தியம்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி அன்பளிப்பு

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அங்கு தேவையின் பொருட்டு கொழும்பு தெற்கு றோட்டறி கழகத்தின் நிதி உதவியுடன் நேற்று (17) மடிக்கணினி அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் மற்றும் தகவல் சேகரித்தல் செயல்பாடு, இலத்திரனியல் முறையில் தகவல் பரிமாற்ற சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் மன்னார் பொது வைத்தியசாலை முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதற்கான பிரதான நிதி அன்பளிப்பினை கொழும்பு தெற்கு றோட்டறிக்கழகம் மேற்கொண்டிருந்தது தொற்று நீக்கி திரவம் 5 பெட்டிகள் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி கழக அங்கத்தவர்கள் குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: