crossorigin="anonymous">
பிராந்தியம்

துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நேற்று (18) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரத ம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சி.ராஜமல்லிகை, வவுனிக்குள நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. கை.பிரகாஸ் ஆகியோரும் கௌரவ விருந்தினராக துணுக்காய் பிரதேச மூத்த கலைஞர் பரமு தணிகாசலம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேச மக்களால் பாண்பாட்டு நடனங்கள், வாத்தியங்கள் முழங்க மற்றும் கலை கலாசார ஊர்வல பவனியுடன் வெகு விமர்சையாக அழைத்து வரப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்கும் முகமாக மல்லாவி நர்த்தனாலயா மாணவிகளினால் வரவேற்பு நடனமும் கோலாட்ட நடனங்களும் வழங்கப்பட்டன.

பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல் முதலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது

இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மக்கள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − 27 =

Back to top button
error: