crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டு.நகரில் ‘மாற்று மோதிரம்’ கண்காட்சி

திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்தி வருகின்ற அருந்ததி நிறுவனம் இன்று 15 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் ‘மாற்று மோதிரம்’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை நடத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா தெரிவித்தார்.

கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் இக்கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் கேக் கண்காட்சியும் நடைபெறும். அத்துடன் திருமண சேவை, கொட்டுமேளக் காட்சி, மாற்றுமோதிரம் காட்சிகள் மேடையேற்றப்படும் என மேனகா தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாட்டில் தினகரன், வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், பிரபலர் காசிம் உமர், ஏற்பாட்டாளர் கந்தசாமி கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 + = 19

Back to top button
error: