crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம்

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் இன்று (15) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது

இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றி வருகிறார். தொடர்ந்து 9-வது முறையாக அவர் இன்று சுதந்திர தின உரையாற்றுகிறார்.

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார்7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை முழுவதும் டெல்லி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறப் பகுதிகளைக் கண்காணிக்க நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 6

Back to top button
error: