crossorigin="anonymous">
பொது

கிழக்குப்பல்கலைக்கழக பட்டமேற்படிப்புகள் ஆரம்பம்

பல்வேறுபட்ட துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளின், பதவிநிலை உயர்வுகளிற்கான ஆய்வுகளின் அடிப்படையிலான கல்வித்தகமைகளின் அத்தியாவசியம் மற்றும் அதிகரித்துவரும் தனிப்படட உயர்கல்வித் தகமைகளின் தேவை என்பவற்றை உணர்ந்து கிழக்கு பல்கலைக்கழகமானது புலமை சார் விருத்தி செயற்படுகளை விரிவாக்கிவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சகல துறைகளிலும் பட்டமேற்படிப்புகள் ஒரேதடவையில் ஆரம்பிக்கப்படுகின்றன. இது பல்கலைக்கழக வரலாறில் ஓர் மைல் கல் என்பதோடு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவனம் மற்றும் தொழிநுட்ப பீடம் என்பவற்றில் MPhil , PhD ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

விசேடமாக நிர்வாக சேவை அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் பணிப்பாளர்கள் ஆகியோரின் பதவி உயர்வுகளில் இக்கற்கை நெறிகள் மிகுந்த பயனளிக்கும் என்பது தெளிவு.

இருபதிற்கும் மேற்படட பேராசிரியர்களும் அறுபதுக்கும் அதிகமான கலாநிதிகளும் அடங்குகின்ற திறமையான குழுவினர் மேற்படிப்பு கற்பித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கையை வழிநடாத்துகின்றனர் என்பது முக்கிய அம்சமாகும்.

எனவே காலம் தாழ்த்தாமல் உங்கள் பிரதேசத்திலேயே கல்வித்தகைமையை உயர்த்திக்கொள்ளக்கூடிய இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: