பொது
வாரத்தில் 5 நாட்கள் வழமை போன்று பாடசாலை

இன்று (15) திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்களுக்கு வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கான ஒழுங்குகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளது
போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பொருத்தமான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன..
பாடசாலை வாரத்தில் போக்குவரத்துச் சிரமங்களினால் மேலும் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த நிவாரணங்களை அதிபர்கள் வழங்குவதுடன், அந்த நிவாரணங்களை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு அறிவிக்கபபட்டுள்ளன..
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பாடசாலை நேரத்தில், பாட விதானத்தில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.