crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இதுவரை 27,74,683 கொவிட்19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை நாட்டில் இதுவரை 27 லட்சத்து 74 ஆயிரத்து 683 கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொவிஷீல்ட் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 9 லட்சத்து இருபத்து ஐயாயிரத்து 242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது இதன் இரண்டாவது தடுப்பூசி 3 லட்சத்து 55 ஆயிரத்து 358 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சைனோ ஃபார்ம் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 12 லட்சத்து 69 ஆயிரத்து 157 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 640 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 64 ஆயிரத்து 986 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்களுக்கு 5300 சைனோ பார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 1 =

Back to top button
error: