crossorigin="anonymous">
பொது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பறந்தார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னு (13) அதிகாலை நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேயை நோக்கி ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு (22:00 GMT) மாலேயை சென்றடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாலைதீவு மாலேயை சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களை அங்கிருந்து கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு நோக்கி புறப்பட்டதாக இலங்கை விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 09 ஆம் திகதி அறிவித்திருந்தார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − = 16

Back to top button
error: