இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றம் வேண்டும் – ஐ. நா

இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
‘நான் இலங்கை மக்களுடன் நிற்கிறேன் எனவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்குமான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறேன்’ எனவும் அவர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அனைத்து வன்முறைச் செயல்களையும் தாம் கண்டிப்பதாகவும், அதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
I stand in solidarity with the people of Sri Lanka & call for dialogue to ensure a smooth transition of government & to find sustainable solutions to the economic crisis.
I condemn all acts of violence and calls for those responsible to be held accountable.
— António Guterres (@antonioguterres) July 11, 2022